இந்தப் பெண்களைக் கண்டால் சொல்லுங்க
06-03-2017 06:22 PM
Comments - 0       Views - 1060

பொரளை ​பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரசேதத்தில், பஸ்ஸில் பயணித்த பெண்ணின் கைப்பையை திருடி, அதிலிருந்து பணம் மற்றும் கடனட்டையில் ஆடைகள் வாங்கிய சந்தேகநபர்கள் இருவரை தேடி, பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

இந்த கைப்பையில் இருந்த 102,300 ருபாய் பணத்தை எடுத்துக்கொண்ட இந்தப் பெண்கள், அதிலிருந்த கடனட்டையை கொடுத்து, ​பொரளையிலுள்ள ஆடையகமொன்றில் 27,705 ரூபாய்க்கு ஆடைகளை கொள்வனவு ​​செய்துள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி முற்பகல் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபரான இரண்டு பெண்களையும் கைதுசெய்ய பொது மக்களிடம், பொலிஸார் ஒத்துழைப்பு கோரியுள்ளனர்.
 
இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், 071 - 8591587, 077 - 7264299, 011 - 2693938, 011 - 2694019 ஆகிய இலக்கங்களை அழைத்து தகவல் தெரிவிக்க முடியும் என பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

"இந்தப் பெண்களைக் கண்டால் சொல்லுங்க" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty