மனைவியை நிர்வாணப்படுத்தி 'முடி'யையும் கத்தரித்தவர் இன்று ஆஜர்
07-03-2017 08:22 AM
Comments - 0       Views - 1273

மனைவியின் அலைபேசிக்கு வந்த, இரண்டு மிஸ் கோல்களினால், சந்தேகமடைந்த அவருடைய கணவன், மனைவியை நிர்வாணப்படுத்தி, அவருடை தலைமுடியையும் கத்தரித்த சம்பவமொன்று கம்பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நாற்பது வயதான தன்னுடைய அழகான மனைவியை 51 வயதான கணவன், இவ்வாறு தாக்குதல் நடத்தியதுடன், கோடரியினாலும் கொத்திக்கொத்தி காயப்படுத்தியுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கணவன், கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை இன்று (07) வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சாந்தனி மீகொட உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பெண், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள கம்பளை, இரத்மல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், மேசன் வேலைச்செய்தவர் என்றும், வீடொன்றை நிர்மாணிக்கும் போது தவறிவிழுந்தமையால் அவருடைய இடுப்பு அடிப்பட்டுள்ளது. அன்றிலிருந்து எவ்விதமான வேலைகளும் இன்றி, வீட்டிலேயே இருப்பதாக அறியமுடிகின்றது.

திருமணம் முடித்த பிள்ளைகள் இருந்தாலும், அவருடைய மனைவி மிகவும் அழகானவர். ஆதனால், மனைவியின் மீது கண்ணும் கருத்துமாக இருந்ததுடன், பயணங்களையும் தடைசெய்திருந்தார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், தன்னுடைய மனைவியின் அலைபேசிக்கு இரண்டு 'மிஸ்கோல்' வந்திருந்ததை அறிந்த கணவன், மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். அதனை தாங்கிக்கொள்ளமுடியாத அப்பெண், தன்னுடைய மகளுடைய வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
மனைவியை தேடிச்சென்ற அவர், மகளின் வீட்டில் வைத்து, விவாகரத்து கோரியதுடன், மிகவும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

அதன்பின்னரே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அவர் ஆஜர்செய்யப்பட்டுள்ளார்.

"மனைவியை நிர்வாணப்படுத்தி 'முடி'யையும் கத்தரித்தவர் இன்று ஆஜர்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty