தலைக்கவசம் தொடர்பில் விழிப்புணர்வு வேண்டும்
07-03-2017 10:42 AM
Comments - 0       Views - 11

ரஸீன் ரஸ்மின்

மோட்டார் சைக்கிளைச் செலுத்தும் போது பாதுகாப்புத் தலைக்கவசம் அணிவது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென,  முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஏக்கநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை (7) கூறினார்.

இது பற்றி அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்வீதிகள் காபட் வீதிகளாகப் புனரமைக்கப்பட்டுள்ளன. இதனால் குறித்த வீதிகளில் இளைஞர்கள், பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் கட்டுப்பாடின்றி வேகமாகப் பயணிப்பதை அவதானிக்க முடிகிறது.

இது தொடர்பில் குறித்த கிராம மக்களும் முந்தல் பொலிஸாரின்  கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.

பாதுகாப்புத் தலைக்கவசம் அணிந்து செல்லாமல் பயணித்து விபத்துக்குள்ளாகி உயிர்ழந்தவர்களில் இளைஞர்களே அதிகமானவர்கள் என அவர் சுட்டிக்காட்டினர்.

எனவே, பெற்றோர்கள், குடும்ப அங்கத்தவர்கள் இது தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள், உறவுகள் மோட்டார் சைக்கிளில் பயணிக்கத் தயாராகும் பொழுது நிச்சயமாக தலைக்கவசம் அணிந்து செல்லுமாறு வலியுறுத்தவும்” என்றார்.

"தலைக்கவசம் தொடர்பில் விழிப்புணர்வு வேண்டும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty