சைட்டத்துக்கு எதிராக வௌ்ளியன்று மனுத்தாக்கல்
07-03-2017 06:04 PM
Comments - 0       Views - 12

மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில், எதிர்வரும் 10ஆம் திகதி, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக, இலங்கை மருத்துவச் சபை குறிப்பிட்டுள்ளது.

குறித்த கல்லூரி தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, மருத்துவச் சபையின் பதிவாளர் டெரன்ஸ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

மாலபே மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த கல்லூரிக்கு, மருத்துவப் பட்டத்தை வழங்க அனுமதியளித்து, தீர்ப்பளித்தது. மேலும், அங்கு பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களை, வைத்தியர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்தத் தீர்ப்பு குறித்து, இலங்கை மருத்துவச் சபை பெற்றுக்கொண்ட சட்ட அறிவுரைகளுக்கு அமைய, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக, டெரன்ஸ் டி சில்வா கூறியுள்ளார்.

"சைட்டத்துக்கு எதிராக வௌ்ளியன்று மனுத்தாக்கல் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty