இணைந்து வாழ வேண்டும்; பிணங்கி வாழுதல் ஆகாது
08-03-2017 09:47 AM
Comments - 0       Views - 36

தாங்கள் செய்கின்ற பணி மட்டுமே நேர்த்தியானது; மற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என எண்ணும் சில நபர்கள், தங்கள் வீடுகளில் செய்யும் அதிகாரங்களையே வெளிஇடங்களிலும் செய்வார்கள்.

திருமண வைபவங்கள் மற்றும் பொது இடங்களில் இவர்கள் பிறரை ஏவிக் கொண்டேயிருப்பார்கள். “அந்த வாழையை அங்கே கட்டு”, “கொஞ்சம் உயர்த்தியபடியே கட்டு”, “ஏய் இங்கே வா”, “அங்கே உள்ள கதிரைகளை வரிசையாக வை”, “இங்கே ஒருவருக்குமே சாஸ்திர கடமைகள் தெரிவதில்லை”, “இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்” எனக் குறை சொல்லிக் கொள்வார்கள்.

தாங்களாகவே வலிய வந்து, மற்றவர்களுடன் நாகரிகமின்றி நடப்பதும் விழாக்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு தாமே நாயகர்கள் எனக் கருதிச் செயல்படுவதும் எவராலும் சகிக்க முடியாது.

எவரும் முகம் சுழிக்கும்படி நடந்துகொள்வது, இத்தகையவர்களின் குடும்பத்துக்கே பெரும் சங்கோஜத்தை ஏற்படுத்தி விடுகிறது.

பொது இடங்களில் கௌரவமாகப் பழகாமல் விட்டால், சமூகம் இவர்களிடமிருந்து விலகிவிடும். இணைந்து வாழ வேண்டும்; பிணங்கி வாழுதல் ஆகாது.

 

வாழ்வியல் தரிசனம் 08/03/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  

"இணைந்து வாழ வேண்டும்; பிணங்கி வாழுதல் ஆகாது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty