'பெண்களை தவறாக சித்தரிக்கக்கூடாது'
08-03-2017 09:24 AM
Comments - 0       Views - 102

சுசித்ரா டுவிட்டர் விவகாரத்தில் பலரும் சிக்கி சிதைந்து கொண்டிருக்க, சிலர் அதுகுறித்து கருத்து சொல்ல மறுத்தபோதும், சிலர் தைரியமாக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை சாந்தினி, தயங்காமல் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, தற்போது நான் பத்து திரைப்படங்களுக்கு மேல் நடித்துக்கொண்டிருக்கிறேன். சதுரங்கவேட்டை-2, வணங்காமுடி, பலூன் உள்பட நான்கு திரைப்படங்களில் மாறி மாறி பகல் - இரவு என கோல்ஷீட் கொடுத்து நடித்து வருகிறேன்.

இந்த பிசியிலும் சுசித்ரா டுவிட்டரில் பல நடிகர் நடிகைகளின் ஆபாச படங்கள் வெளியாகியிருப்பதை அறிந்ததும் உடனே அதை பார்த்தேன். இதை அவர் செய்தாரோ இல்லை வேறு நபர்கள் செய்தார்களோ. யார் செய்தாலும் கண்டிக்கத்தக்கதுதான்.

குறிப்பாக, ஒரே துறையில் இருப்பவர்களை அப்படி செய்வது வேதனைக்குரியது. இதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, எந்த பெண்களையும் தவறாக சித்தரிக்கக்கூடாது என்பது எனது கருத்து. இதுபோன்ற விசயங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார் சாந்தினி.

"'பெண்களை தவறாக சித்தரிக்கக்கூடாது'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty