பாடகி சுசித்ராவுக்கு மனநோய் சிகிச்சை
08-03-2017 09:41 AM
Comments - 0       Views - 104

கடந்த சில தினங்களாக இணையதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வந்தவர் சுசித்ரா. அவரது டுவிட்டரில் எந்த நேரத்திலும் ஆபாச வெடிகுண்டுகள் வெடிக்கலாம் என்கிற அச்சுறுத்தல் ஒரு பக்கம், அவர் எப்போது அடுத்த ஆபாச டுவிட் செய்வார் என்று ஆவலுடன் காத்திருந்த நெட்டிசன்கள் இன்னொரு பக்கம் என எங்கு பார்த்தாலும் சுசித்ரா என்ற சுனாமிதான் வீசிக்கொண்டி ருந்தது.

ஒருவழியாக அவரது இணையதளத்தில் அப்டேட் ஆகிக்கொண்டிருந்த ஆபாச படங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கோலிவுட்டில் நிலவி வந்த கலவரம் நிலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த டுவிட்டர் பிரச்சினையால், சுசித்ராவுக்கும், அவரது கணவர் கார்த்திக்கிற்கும் இடையே விரிசல் விழுந்து அவர்கள் விவாகரத்து வரை சென்று விட்டனர்.

அதோடு, இந்த விவாகரத்துக்கு முக்கிய காரணம் சுசித்ரா மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததே என்றும் கூறி வந்தார் கார்த்திக்.
இந்த நிலையில், ஒருவழியாக டுவிட்டர் விவகாரம் தற்போது ஓய்ந்திருக்கும் நிலையில், விரைவில் சென்னையை காலி பண்ணி விட்டு லண்டன் பறக்கிறாராம் சுசி. அங்கு அவ ருக்கு மனரீதியாக ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறதாம்.

 

 

"பாடகி சுசித்ராவுக்கு மனநோய் சிகிச்சை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty