தினேஷ் எம்.பிக்கு ஒருவாரகால தடை
08-03-2017 03:42 PM
Comments - 0       Views - 208
ஜே.ஏ.ஜோர்ஜ்

-ஜே.ஏ.ஜோர்ஜ்

சபாநாயகரின் கட்டளைக்கு இணங்காமையால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஷ் குணவர்தனவை, ஒருவாரத்துக்கு சபை நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்துவதற்கு சபையில் யோசனை முன்வைக்கப்பட்டது.

சபைமுதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவே யோசனையை முன்வைத்தார். இந்த விவகாரம் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தவேண்டும என்று அமைச்சர் சரத் அமுனுகம கேட்டார்.

அதன்படி நடந்த வாக்கெடுப்பில் யோசனைக்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன. 03 எம்.பிக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. 104 உறுப்பினர்கள் வாக்களிப்புக்கு வரவில்லை.

"தினேஷ் எம்.பிக்கு ஒருவாரகால தடை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty