பொறுமை, கோபத்தை மறக்கடிக்கும்
09-03-2017 09:22 AM
Comments - 0       Views - 102

எங்களுக்குக் கடுமையான ஆத்திரம். யாராவது வந்துற்றால், அதனை அவர்கள் மீது செலுத்துவதனால், எங்களுடைய மனக்குமுறல் தீர்ந்து விட்டதாக எண்ணுகின்றோம். 

ஆனால், எங்களின் மேலான தீவிர உணர்வை, இன்னும் ஒருவரிடம் பொறுப்பித்து விடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது? பிரச்சினைகளைப் பரஸ்பரம் எடுத்துரைத்தால், கோபத்தின் தீவிரம் எழாது. 

இன்னும் ஒரு முக்கியமான விடயம் யாதெனில், சில சமயங்களில், நாங்கள் தப்புக் கணக்குப் போடுவதால், எங்களிலும் தவறுகள் இருக்கலாம் எனச் சீர்தூக்கிப் பார்ப்பதுமில்லை. 

தவறான எமது செய்கையினால், எங்களை யார் மன்னிக்க வேண்டும் சொல்லுங்கள்? கோபத்தை விடுத்து, மன்னிப்புக் கோரினால் நட்பு வலுக்கும். சம்பந்தப்பட்டவர்களும் தாங்களும் ஏதாவது தவறு செய்தால், அதனை ஒப்புக் கொள்ளலாம். 

வெறுப்பை ஒருவர் மீது திணிப்பதும் பதிலுக்கு அவரும் வெறுப்பை உணர்வதும், உறவுகள் தான் கூறாவதற்கு வழிவகுக்கும். பொறுமை, கோபத்தை மறக்கடிக்கும்.  

 

வாழ்வியல் தரிசனம் 09/03/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   

"பொறுமை, கோபத்தை மறக்கடிக்கும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty