வீடுகள் கையளிக்கப்படவுள்ளன
09-03-2017 10:23 AM
Comments - 0       Views - 6

எம்.யூ.எம். சனூன்

புத்தளம், முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பைதுஸ் ஸகாத் நிதியத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய வீடுகள் இரண்டு, பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு, நாளை (10) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

புத்தளம் மணல்குன்று செம்மந்திடல் பிரதேசத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள 20 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டத்தில் மேலதிகமாக இந்த இரு வீடுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளி நிர்வாக சபை தலைவர் பீ.எம். அப்துல் ஜனாப் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், உலமாக்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

"வீடுகள் கையளிக்கப்படவுள்ளன" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty