சரணாலயத்தில் தீ
09-03-2017 11:12 AM
Comments - 0       Views - 13

க.மகாதேவன்

புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிக்கட்டு ஆனைவிழுந்தான் பறவை சரணாலயத்தில் நேற்று மாலை 6 மணியளவில் ஏற்பட்ட காட்டுத் தீ இரவு 9 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ  நிலையப் பொறுப்பதிகாரி கேரணல் ருத்ரிக்கோ தெரிவித்தார்.

சரணாலயத்தின் சுற்று வட்டத்தில், வரட்சியான நிலையில் காணப்பட்ட புற் தரைக்கு யாராவது தீ வைத்து இருக்கலாம் எனச் சந்தேகிப்படுகிறது.

இந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், இராணுவம், சிலாபம் நகர சபையின் தீயணைப்புப் பிரிவு, ஆராச்சிக்கட்டு பிரதேச சபை, பொலிஸ் மற்றும் வனஜீவித் திணைக்கள அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

"சரணாலயத்தில் தீ" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty