காரணமின்றி பாடசாலை மாணவிகள் இடைநிறுத்தம்?
09-03-2017 04:10 PM
Comments - 0       Views - 10

கெக்கிராவ பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல முஸ்லிம் பாடசாலையொன்றில், உயர்தரத்தில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகள், சரியான காரணங்களெதுவுமின்றி பாடசாலையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என, அம்மாணவிகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக, வலையக் கல்விப் பணிப்பாளரிடம் முறையிட்டுள்ள போதிலும், அவர் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என, பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் தங்களுக்கென இலவசமாக வழங்கும் கல்வியைக் கற்பது, அனைத்து மாணவ மாணவிகளினதும் உரிமையாகும். அவர்களது இந்த உரிமையை, தகுந்த காரணமின்றி எவரும் பறிக்க முடியாது. இவ்வாறிருக்கையில், தகுந்த காரணம் எதுவும் முன்வைக்காமல், மேற்படி ஐந்து மாணவிகளையும் பாடசாலையை விட்டு இடை நிறுத்தம் செய்திருப்பது, எந்த விதத்தில் நியாயமாகும் என்று, பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம், வலையக்கல்வி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தங்கள் பிள்ளைகளுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"காரணமின்றி பாடசாலை மாணவிகள் இடைநிறுத்தம்?" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty