பிள்ளைகளின் பாதுகாப்புக்கு புதிய திட்டம்
09-03-2017 05:04 PM
Comments - 0       Views - 12

இந்நாட்டுப் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தகவல் வழிகாட்டல்கள் உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் அடங்கிய இணையத்தளமொன்றை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் இலங்கைத் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் (ICTA) ஆகியன இணைந்து, ஆரம்பிக்கவுள்ளன.

விசேடமாக, பிள்ளைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என்ற மூன்று தரப்பினருக்கும் தேவையான தகவல்களை உள்ளடக்கும் வகையில், இந்த இணையத்தளம் தயாராகி வருவதாக, ஐ.சி.டி.ஏ முகவரகம் தெரிவித்தது.

தற்காலத்தில் இடம்பெறும் அதிகளவான சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுக்கும் வகையிலான முழுப் பாதுகாப்பு, உபாயங்கள் மற்றும் ​பிள்ளைகள், பெற்றோர், ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல் நடவடிக்கைகள், இவ்விணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, மேற்படி முகவரகம் மேலும் தெரிவித்தது.

"பிள்ளைகளின் பாதுகாப்புக்கு புதிய திட்டம் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty