2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘தண்டனை வழங்க, ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை’

Princiya Dixci   / 2017 மார்ச் 09 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“இலஞ்ச, ஊழல்கள் தொடர்பான சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாடுகளில், 158 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் முடிவடைந்துள்ளன” என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “விசாரணை நிறைவடைந்த முறைப்பாடுகள்  சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு, மேலதிக நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” எனக் கூறினார். 

ஜே.வி.பியின் தலைவரும் எதிர்கட்சி கொரடாவுமான அநுர குமார திசாநாயக்க, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.   

முன்னதாக கேள்வியெழுப்பிய அநுர குமார திசாநாயக்க எம்.பி, “கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச, ஊழல்களை விசாரணை செய்வதற்காக, பொதுமக்களின் நிதியில் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. இத்தனை நாட்கள் ஆகியும் அதில் விசாரணைகள் மாத்திரமே நடைபெறுவதுன் அதற்கான தீர்வுகள் எவையும் இல்லை. இதனுடாக மக்களின் நிதியே வீணடிக்கப்படுகின்றன. இத தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்” என்றார்.  

அதற்குப் பதிலளித்த பிரதமர், “ இலஞ்ச, ஊழல்கள் தொடர்பான சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு 2015 மார்ச் மாதம் 03 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவுக்கு 1,599 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.  

இந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதில் 1,180 முறைப்பாடுகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளுக்கு மேலதிகமான விசாரணைகள் தேவையில்லை என, ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டது.  

400 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், 158 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.  

இந்த ஆணைக்குழுவால் முறைப்பாடுகளை விசாரணை மட்டுமே செய்ய முடியும். தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை. சட்டமா அதிபர் ஊடாக இவர்களுக்கான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .