நடிகை பாவனாவுக்கு திருமணம்
09-03-2017 08:34 PM
Comments - 0       Views - 999

பிரபல கன்னட தயாரிப்பாளரும், பாவனா நடித்த 'ரோமியொ' என்ற கன்னட திரைப்படத்தின் தயாரிப்பாளருமான நவீன் என்பவருக்கும், நடிகை பாவனாவுக்கும் இன்று காலை கொச்சியில் எளிமையாக நிச்சயதார்த்த நிகழச்சி நடந்துள்ளது.

இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவீட்டார் தரப்பில் இருந்து 16 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை மஞ்சுவாரியர் மற்றும் நடிகர் சம்யுக்தாவர்மா ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

பாவனா நிச்சய்தார்த்த புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது

பாவனாவுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த தகவலின்படி பாவனா-நவீன் திருமணம் இவ்வருடம் ஓகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெறும் என்று தெரிகிறது.

"நடிகை பாவனாவுக்கு திருமணம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty