கடலில் மிதந்து வந்த தேவாலயம் மீட்பு
11-03-2017 11:17 AM
Comments - 0       Views - 242

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, ஒலுவில் கடல் பிராந்தியத்தில் 20 அடி சதுரப் பரப்பளவு கொண்ட மரத்திலான மாதிரி தேவாலயமொன்று மிதந்து வந்த நிலையில், கடற்படையினரால் நேற்று (10) மாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மரத்திலான மாதிரி தேவாலயம், திருக்கோவில் பிரதேசத்திலிருந்து கடலில் மிதந்து வந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவை ஒலுவில் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

மரத்திலான தேவாலயம் போன்று வடிவமைக்கப்பட்டு, அதனுள் பூசை வழிபாடுகள் இடம்பெற்ற தடையங்களும் மற்றும் பொருட்களும் காணப்படுகின்றது.

மரத்தினால் செய்யப்பட்ட இத் தேவாலயத்தைச் சுற்றி தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகள் காணப்படுகின்றன.

இவை ஏதாவது பலி கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதொன்றாக இருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"கடலில் மிதந்து வந்த தேவாலயம் மீட்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty