பஸ்ஸுக்கு கல்வீச்சு
11-03-2017 02:42 PM
Comments - 0       Views - 239

எம்.எல்.எஸ்.டீன்

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு ஊடாக அக்கறைப்பற்றை நோக்கிப் பயணித்த (அல் ராஷித்) தனியார் பஸ்ஸுக்கு, இன்று (11) அதிகாலை 4 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவில் வைத்து, கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினால் குறித்த பஸ்ஸின் இடது பக்க கண்ணாடிகள் இரண்டு சேதமடைந்துள்ளன.

கல்வீச்சுக் காரணமாக பாரிய சத்தத்துடன் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியமையினால், பயணிகளில் சிலர், சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அக்கரைப்பற்று - மட்டக்களப்பு ஊடாக கொழும்புக்கு இரு வழிப் பாதை பயணத்தில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கிடையில் ஏற்பட்டு வரும் தீவீர தொழில் போட்டியினால் பயணிகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இவ்வாறான தாக்குதல்களினால் அச்சமடைந்துள்ள பொது மக்கள், இப் பாதையூடாகப் பயணிப்பதைத் தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"பஸ்ஸுக்கு கல்வீச்சு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty