வடக்கு - தெற்கு பெண்கள் பாத யாத்திரை
12-03-2017 03:38 PM
Comments - 0       Views - 19

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச் சேவைத் தொழிலாளர் சங்கப் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில், சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, வடக்கு - தெற்கு பெண்கள் இணைந்த பாதயாத்திரை, மன்னாரில் இன்றுக் காலை முன்னெடுக்கப்பட்டது.

இனங்களுக்கிடையில் சமத்துவத்தின் மூலமாக, சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டத்துக்காக, பெண் தொழிலாளர்களின் உரிமை மற்றும் கௌரவத்தை உறுதிசெய்ய வலியுறுத்தும் வகையில், குறித்த பாதயாத்திரை இடம்பெற்றது.

குறித்த பாதயாத்திரையில் கலந்துகொள்வதற்காக, தென்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் வருகை தந்திருந்ததோடு, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களும் கலந்துகொண்டனர்.

இன்றுக் காலை 10 மணியளவில், மன்னார் பிரதான பாலத்தில் ஆரம்பமான இந்த பாதயாத்திரை, பிரதான வீதியூடாகச் சென்று, மன்னார் நகர சபை மண்டபத்தை சென்றடைந்தது.

குறித்த பாதயாத்திரையானது மன்னார் நகர சபை மண்டபத்தை சென்றடைந்த நிலையில், அங்கு, பெண்கள் தின பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்டான்லி டி மேல், உதவி தேர்தல் ஆணையாளர் டெனிசியஸ் கனியூட் அரவிந்தராஜ், உதவி தொழில் ஆணையாளர் ஜெகதீஸ்வரன் நீலலோஜினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

"வடக்கு - தெற்கு பெண்கள் பாத யாத்திரை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty