மாங்குளத்தில் நீர்ப்பாசனப் பணிமனை
12-03-2017 05:06 PM
Comments - 0       Views - 22

வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனை, மாங்குளத்தில் அமையவுள்ளது.

இதற்கான பணிமனைக் கட்டடத்துக்கான அடிக்கல், மாங்குளத்தில் நேற்று நாட்டப்பட்டுள்ளது.

இரண்டு மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ள இக்கட்டடத்தை நிர்மாணிப்பதெற்கென, 43 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியை, ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கை அரசாங்கமும் இணைந்து வழங்கியுள்ளன. கட்டட நிர்மாணப்பணிகள் யாவும், இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"மாங்குளத்தில் நீர்ப்பாசனப் பணிமனை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty