செவ்விளநீரின் விலை அதிகரிப்பு
12-03-2017 05:47 PM
Comments - 0       Views - 84

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சல் நோயாளர்கள் அதிகரித்துள்ளமை காரணமாக, செவ்விளநீர் விலையும் அதிகரித்துள்ளதாக, பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா பிரதேசத்தில் ஒரு செவ்விளநீர் ரூபாய் 75 தொடக்கம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

வெளி மாவட்டத்திலிருந்து வரும் செவ்விளநீர், விலை அதிகரித்து வருவதே இந்த விலை ஏற்றத்துக்குக் காரணமென, உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

"செவ்விளநீரின் விலை அதிகரிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty