கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது
12-03-2017 06:10 PM
Comments - 0       Views - 18

அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தயார் நிலையில் வைத்திருந்த 20,000 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் சந்தேகநபர் இருவர், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

திவுலாப்பிட்டிய களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த கழிவுத் ​தேயிலையைக் கைப்பற்றியதாகவும், பொதி செய்யப்பட்டிருந்த மேற்படி கழிவுத் தேயிலையில், 100 சதவீதமான சுத்தமான இலங்கைத் தேயிலை என, ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து கொள்கலன்கள் இரண்டும் மீட்கப்பட்டனவெனவும் குறித்த களஞ்சியசாலையிலிருந்த சிலர் தப்பியோடியுள்ளனரெனவும் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

"கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty