கலைப்பீடத்துக்குப் பூட்டு
12-03-2017 09:02 PM
Comments - 0       Views - 46

எம்.றொசாந்த்  

“பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைப்பீடம் தவிர்ந்த, ஏனைய கலைப்பீட மாணவர்களது கற்றல் நடவடிக்கைகள் யாவும், காலவரையற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளன” என்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  

மேலும், “விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும், விடுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்” எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  

வெள்ளிக்கிழமை (10) இரவு, பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்களுக்கிடையில் குழப்பநிலை ஏற்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை (11) இடம்பெறவிருந்த கலைத்துறை மாணவர்களின் வரவேற்பு நிகழ்வைக் கொண்டாட வேண்டாம் என, பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. எனினும், அறிவித்தலைப் புறக்கணித்து, வரவேற்பு நிகழ்வை மாணவர்கள் கொண்டாடினர்.  

இதையடுத்து, பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட மாணவர்களது கற்றல் நடவடிக்கைகள் காலவரையற்று நிறுத்தப்பட்டுள்ளன எனவும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் விடுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.   

"கலைப்பீடத்துக்குப் பூட்டு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty