மாணவர் ஒன்றியம் கலைக்கப்பட்டது
12-03-2017 09:05 PM
Comments - 0       Views - 74

-எம்.றொசாந்த்

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர், பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழகச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி, கலைப்பீட பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் ஆகியோரின் எழுத்துமூல மற்றும் வாய்மொழிமூலமாக வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறியமை ஆகியவற்றுக்காக, கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது.   

மேலும், ஒழுக்கவிதிகளை மீறிய மாணவர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். 

"மாணவர் ஒன்றியம் கலைக்கப்பட்டது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty