டெங்கின் கோரம்: கிண்ணியாவில் மீண்டுமொருவர் பலி
13-03-2017 11:04 AM
Comments - 0       Views - 106

ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியாவில் பிரதேசத்தில், டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் ஒருவர், இன்று (13) காலை உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய, கிண்ணியாவில் பிரதேசத்தில், டெங்குக் காய்ச்சலினால் பலியானோரின் தொகை,  ஒன்பதாக உயர்ந்துள்ளது. நேற்றையதினமும் இருவர் உயிரிழந்திருந்தனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையின்  தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, மாஞ்சோலைச்சேனை 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கட்ட மிரான் பைசல் (வயது 39) என்ற,  இரண்டு பிள்ளையின் தந்தையே, இன்று உயிரிழந்துள்ளார்.

இவரது சகோதரி பாத்திமா நபீயா (வயது 36), டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளான நிலையில், கடந்த வெள்ளிக்சிழமை (10) உயிரிழ​ந்தமை குறிப்பிடத்தக்கது.

"டெங்கின் கோரம்: கிண்ணியாவில் மீண்டுமொருவர் பலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty