கலாயால் கடுப்பான கல்ராணி
13-03-2017 11:16 AM
Comments - 0       Views - 122

லோரன்சுடன் நடித்த “மொட்ட சிவா கெட்ட சிவா” திரைப்படம் வெளியானால் எனது லெவலே வேற என்று பெரிய பில்டப் கொடுத்து வந்தார் நிக்கி.

ஆனால் இப்போது அத்திரைப்படம் வெளியாகி சர்ச்சையை சந்தித்திருப்பதோடு, நிக்கி கல்ராணி தேவையில்லாமல் ஓவர் கவர்ச்சி காண்பித்து நடித்திருப்பதாக சொல்லி இணையதளம் மூலம் ரசிகர்கள் அவரை சீண்டியுள்ளனர். ரசிகர்களின் இந்த குற்றச்சாட்டு நிக்கி கல்ராணியை கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.

அதையடுத்து, “நான் ஒன்றும் கவர்ச்சியில் ஓவர் டோஸ் கொடுக்கவில்லை. மீடியமாகத்தான் ஆடைகுறைப்பு செய்திருந்தேன். அதுவும் கதைக்கு தேவைப்பட்டதால். அந்த கதைக்கு நான் அப்படி நடிக்கவில்லை என்றால் எடுபடாது. மேலும், இயக்குநர் சாய் ரமணி, லோரன்ஸ் வலியுறுத்தியதால் நான் கவர்ச்சியாக நடித்ததாகவும் சிலர் சொல்கிறார்கள்.

ஆனால் அதில் துளியும் உண்மையில்லை. யாரும் என்னை வற்புறுத்தவில்லை. கதையை சொல்லி இந்த அளவுக்கு நவநாகரீக பெண்ணாக நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அந்த கதைக்கு அப்படி நடிப்பது அநாவசியமில்லை, அவசியம் என்பதால் நானும் ஒத்துக்கொண்டு நடித்தேன்” என்கிறார் நிக்கி கல்ராணி.

"கலாயால் கடுப்பான கல்ராணி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty