வொல்வோவின் புதிய s90 அறிமுகம்
13-03-2017 11:49 PM
Comments - 0       Views - 16

IWS ஹோல்டிங்ஸ் குழுமத்தின் இணை நிறுவனமான வரையறுக்கப்பட்ட சுவீடிஷ் கார்ஸ் நிறுவனம், வொல்வோவின் புத்தம் புதிய, நான்கு கதவுகள், ஐந்து ஆசனங்களுடன் கூடிய மூடிய சொகுசு மோட்டார் வாகனமான (Sedan) s90 ஐ அறிமுகம் செய்கிறது. இது, Scalable Product Architecture (SPA) முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, அதியுயர் செயற்பாட்டை வெளிப்படுத்தும் புதிய வொல்வோ 90 மற்றும் 60 தொடரின் அம்சங்களோடு தயாரிக்கப்பட்டுள்ளது.  

2016ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வெளிவந்த புதிய s90, குறுகிய காலப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது. வருடத்தின் மிகச்சிறந்த கார் வடிவமைப்பு, மிகச்சிறந்த தொழில்நுட்பம் கொண்ட காருக்கான விருது, வருடத்தின் மக்களின் தெரிவு ஆகியன இவற்றில் சிலவாகும்.  

90 தொடரில் அதன் இதர மாதிரிகளான XC90 மற்றும் V90 என்பனவற்றைப் போன்றே s90யும் அதிகூடிய பாதுகாப்பு வசதிகளுடன், வொல்வோவின் புதிய மாதிரி நுட்பத்தையும் கொண்டுள்ளது. வொல்வோவின் மிகப் புதிய Drive-E சக்தி வலு மாற்று முறை உள்ளடக்கப்பட்ட s90 பெற்றோல் மற்றும் டீசல் இரண்டிலும் காணப்படுகிறது. “Thor’s Hammer” வடிவிலான LED பிரதான முன் விளக்குகளும், அதன் கண்கவர் கவர்ச்சியான கவசமும், மனம் கவரும் வேறெங்கும் காணாத P1800 வடிவமும், வொல்வோவின் உருக்குச் சின்னமும் ஒன்றிணைந்து இதற்கு மேலும் மெருகூட்டுகின்றது. s90இன் டெஸ்போட் (Dashboard) ஆனது, மெல்லியதாகவும், அதிக மர உள்ளடக்கங்களைக் கொண்டதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.விசேடமாக வடிவமைக்கப்பட்ட சுக்கான், ஏனைய உபகரணத் தொகுதிகள், ஆசனங்கள் மற்றும் மத்திய கொன்சோல் (Centre console) ஆகியன மேலதிக இதன் உள்ளடக்கங்களாகும்.  

புதிய s90 எஞ்ஜின் பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு எரிபொருள் மாதிரிகளிலும் கிடைக்கிறது. அதிக செயற்பாடு, குறைந்த காபன் வெளியேற்றம் போன்ற அம்சங்களுடன், 254 HP மற்றும் 190 HP சக்தியை வெளிப்படுத்துகிறது. மணிக்கு 230 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லக்கூடியதோடு இலாபகரமான 2.0 லீற்றர் எஞ்ஜினையும் கொண்டுள்ளது.  

சென்சஸ் (Sensus) என அழைக்கப்படும் இணைப்பு வசதிகளின் ஒட்டுமொத்த சேர்வையான வொல்வோவின் புதிய அம்சம் 9.5 அங்குல செயற்றிறன் மிக்க Touch screen உடன் அனைத்து கார்களுக்கான செயற்பாடுகளாகிய வழிகாட்டல் (Navigation) மற்றும் ஏனைய கேளிக்கை அம்சங்களை ஒன்று சேர்க்கும் மையமாகச் செயற்படுகிறது. இது அனைத்து வொல்வோ கார்களிலும் காணப்படுகின்றது.    

"வொல்வோவின் புதிய s90 அறிமுகம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty