கிளிநொச்சியில் கடும் மழை
13-03-2017 03:13 PM
Comments - 0       Views - 19

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக, பல தாழ்நிலப் பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கின.

பிற்பகல் இரண்டு மணி முதல் நான்கு முப்பது  மணி வரை தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணடாக, வீதிகளில் வெள்ளம் நிரப்பி வழிந்ததோடு, கிராமங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

கடும் மழை காரணமாக, மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட, தற்காலிக வீடுகளில் வசித்த மக்கள், பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன், காலபோக நெற் செய்கையின் அறுவடை தற்போது முழுமையாக  நிறைவு பெறாத நிலையில், விவசாயிகள்  பாதிப்புக்களுக்குள்ளாகியதுடன், அறுவடை செய்த நெல்லை உலர வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

"கிளிநொச்சியில் கடும் மழை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty