வரலாற்றில் இன்று: மார்ச் 15
15-03-2017 12:00 AM
Comments - 0       Views - 41

கி.மு.44: ரோம ஆட்சியாளர் ஜுலியஸ் சீசர், புரூட்டஸினால் குத்திக்கொல்லப்பட்டார்.

1943: கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது முதல் அமெரிக்கப் பயணத்தின்பின் ஸ்பெய்னுக்குத் திரும்பினார்.

1776: தென் கரோலினா, சுதந்திரப் பிரகடனம் செய்த முதல் அமெரிக்க காலனியாகியது.

1887: உலகின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்போர்னில் நடைபெற்றது.

1917:ரஷ்யாவில் சார் மன்னன் இரண்டாம் நிக்கலஸ் ஆட்சிப்பொறுப்பை துறந்தவுடன் அவரின் சகோதரர் மன்னரானர்.

1922: பிரிட்டனிடமிருந்து எகிப்து சுதந்திரம் பெற்றது.

1985: உலகின் முதலாவது இணையத் தள பெயர் (symbolics.com)  பதிவுசெய்யப்பட்டது.

1985: சோவியத் யூனியனின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக  மிகைல் கொர்பசேவ் தெரிவானார்.

1988: ஈராக்கியப் படைகள் குருதிய நகரான ஹலப்ஜா மீது இரசாயன நச்சுக் குண்டுகளை வீச ஆரம்பித்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

1990: பிரித்தானிய ஊடகவியலாளர் பர்சாட் பாசொஃப்ட் ஈராக்கில் தூக்கிலிடப்பட்டார்.

1990: மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் ஒன்றியத்தின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவானார்.

1991: இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜேர்மனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து ஜேர்மனி முழுமையான விடுதலையைப் பெற்றது.

2004: சூரியக் குடும்பத்தில் அதி வேகமான பொருள் 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது.

2004: பாடசாலைகளில் மதச்சின்னங்களை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி ஜக் சிராக் கையெழுத்திட்டார்.

2007: இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

"வரலாற்றில் இன்று: மார்ச் 15" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty