கிண்ணியாப் பாடசாலைகளில் மாணவர் வரவில் வீழ்ச்சி;டெங்கால் 9 பேர் பலி
13-03-2017 04:48 PM
Comments - 0       Views - 122

-அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

மிகத் தீவிரமாக பரவி வரும் டெங்குக் காய்ச்சல் காரணமாக  கிண்ணியா வலயப் பாடசாலைகளில்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக  அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்;பை தெரிவித்தார்.

இந்நிலையில், ஆசிரியர்களின் வரவு சுமார் 70 சதவீதமாகவும் மாணவர்களின் வரவு 55 சதவீதமாகவும் காணப்படுகின்றது.
கிண்ணியாவில் பரவுகின்ற டெங்குக் காய்ச்சல் காரணமாக   தனியார் கல்வி நிலையங்கள், மதரஸாக்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

டெங்குக் காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கிண்ணியா, மாஞ்சோலைச்சேனை 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த  2 பிள்ளைகளின் தந்தையான கட்டமிரான் பைசல் (வயது 39) என்பவர் இன்று  (13) காலை உயிரிழந்துள்ளார்.     

கிண்ணியாவில் டெங்குக் காய்ச்சல் காரணமாக  இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஜனவரி  முதலாம் திகதி முதல் இதுவரையில் 1,150 பேர்  டெங்குக் காய்ச்சல் காரணமாக   கிண்ணியா தள வைத்தியசாலையில் சிசிச்சை பெற்றுள்ளார்கள். மேலும், இவ்வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள்  அதிகரித்து வருவதாகவும் அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"கிண்ணியாப் பாடசாலைகளில் மாணவர் வரவில் வீழ்ச்சி;டெங்கால் 9 பேர் பலி " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty