சவக்குழியிலிருந்து சிசுவின் ஆடைகள் மீட்பு
14-03-2017 02:36 AM
Comments - 0       Views - 209

தீஷான் அஹமட்

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு மயானத்தில் உள்ள புதைகுழிகளில் ஒன்று தோண்டப்பட்டபோது, அதிலிருந்து சிசுவுக்கு அணிவிக்கின்ற மேலாடையொன்றும் உள்ளாடையொன்றும், சிறு பிள்ளைகளை போர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் போர்வையும் மீட்கப்பட்டுள்ளன.  

இந்நிலையில், சந்தேகத்துக்கு இடமான அந்த புதைக்குழியை தோண்டுவதற்கான அனுமதியை, மூதூர் நீதிமன்றத்தில் பொலிஸார் கோரியிருந்தனர். 

அதற்கமைவாக, மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் அந்தப் புதைகுழி, நேற்று (13) தோண்டப்பட்டது. 

இதன்போதே, மேற்படி ஆடைகள் மீட்கப்பட்டன. வேறெந்த சந்தேக பொருட்களும் அக்குழியிலிருந்து மீட்கப்படாமையால், நீதவானின் உத்தரவின் பிரகாரம், அக்குழி மீண்டும் மூடப்பட்டது.

"சவக்குழியிலிருந்து சிசுவின் ஆடைகள் மீட்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty