டெங்குவால் இரு பெண்கள் உயிரிழப்பு
14-03-2017 10:10 AM
Comments - 0       Views - 253


-அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ்,   ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியாவில் டெங்குக் காய்ச்சல் காரணமாக பெண்கள் இருவர் திங்கட்கிழமை (13) இரவு உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கிண்ணியாவைச் சேர்ந்தவ 4 பிள்ளைகளின் தாயான பாறூக் கனீஷா (வயது 58),  ரஸீன் சாஹீரா (வயது 26) ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கிண்ணியாவில் டெங்குக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளனர் என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி, டொக்டர் அஜீத் தெரிவித்தார்.

 

"டெங்குவால் இரு பெண்கள் உயிரிழப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty