சணச இன்சூரன்ஸுக்கு கௌரவம்
14-03-2017 07:17 PM
Comments - 0       Views - 36

நுண் காப்புறுதி சேவைகள் வழங்குநரான சணச காப்புறுதி கம்பனி லிமிட்டெட், அண்மையில் நடைபெற்ற ACCA நிலைபேறான அறிக்கையிடல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் பிரிவில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது.  

இலங்கை பட்டைய கணக்காளர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பு சினமன் கிரான்ட் ஹொட்டலில், அண்மையில் நடைபெற்ற இவ் விருது வழங்கும் நிகழ்வில், நாட்டின் வெளிப்படையான, பொறுப்புக்கூறக்கூடிய மற்றும் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டிருந்தன. சர்வதேச GRI நியமங்களின் பிரகாரம் செயற்படும் நிறுவனங்களைக் கௌரவிக்கும் வகையில் வருடாந்தம் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனூடாக நிலைபேறான அபிவிருத்திக்கான சிறப்பு வெளிப்படுத்தப்படும்.  

சணச காப்புறுதி நிறுவனத்தின் பொது முகாமையாளர் இந்திக கிரிவந்தெனிய கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் காணப்படும் மிகவும் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக நாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். வாழ்க்கைத்தரங்களை மேம்படுத்துவது என்பதற்கு அப்பாற்பட்ட எமது அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன், துறையில் உயர் மட்ட நிலைபேறாண்மையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது” என்றார்.  

அடிப்படை மட்டத்திலிருந்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தொடர்பில் சணச காப்புறுதி நிறுவனம் கவனம் செலுத்திய வண்ணமுள்ளது. ஏனெனில் பெருமளவானவர்கள் வங்கிகளிலிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு போதியளவு சொத்துக்களைக் கொண்டிருப்பதில்லை. நிறுவனத்தின் நுண் காப்புறுதிக் கொள்கைகள் என்பது, தற்போதைய வாழ்க்கைத்தரங்களை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. “சணச காப்புறுதி நிறுவனம் என்பது துறையில் காணப்படும் விசேடத்துவம் வாய்ந்த நிறுவனமாக அமைந்துள்ளதுடன், சணச இயக்கத்துடன் ஒத்திசைவாக செயலாற்றி வருகிறது. இது ஒரு தனி உரிமையாளருக்கு மட்டும் உரித்துடைய நிறுவனமல்ல என்பதுடன், சமூகத்துக்கு உரித்துடைய நிறுவனமாக அமைந்துள்ளது. இதன் 95சதவீதமான அனுகூலங்கள், கிராமிய மட்டங்களில் காணப்படும் சணச சங்கங்களினூடாக ஒவ்வொரு அங்கத்தவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது” என்றார். 

"சணச இன்சூரன்ஸுக்கு கௌரவம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty