கட்டடம் சரிந்ததில் மூவர் காயம்
15-03-2017 04:33 PM
Comments - 0       Views - 1

தெஹிவளை, பெயார் லைன்ஸ் வீதியிலுள்ள கட்டடத்தின் பகுதி ஒன்று இடிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடம் ஒன்றே, இவ்வாறு அருகில் இருந்த வீடொன்றின் கூரையில் இடிந்து விழுந்துள்ளது.

இதன்போது, வீட்டில் இருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள், சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

"கட்டடம் சரிந்ததில் மூவர் காயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty