ஜெயலலிதா இடத்துக்கு கௌதமி?
15-03-2017 05:54 PM
Comments - 0       Views - 527

பிரபல நடிகை கெளதமி, நடிப்பில் மட்டுமின்றி சமூகசேவையிலும் ஈடுபட்டு வருபவர் என்பதும் மனதில் தோன்றிய கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்துபவர் என்பதும் அனைவரும் அறிந்ததே.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து இன்று பல அரசியல் கட்சி தலைவர்கள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில், இதுகுறித்து முதன்முதலாக தைரியமாக பிரதமருக்கு கடிதம் எழுதியவர் கெளதமி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பலமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாஜக, பிரபலமான ஒருவரை, குறிப்பாக திரையுலகை சேர்ந்த ஒருவரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாம். ஆர்.கே.நகர் வேட்பாளர் பரிசீலனையில் நடிகை கெளதமி, நடிகர் விஜயகுமார், டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுமார், கங்கை அமரன் உள்பட பலர் உள்ளார்களாம்.

இந்நிலையில்,  பாஜக மேலிடத்தை சேர்ந்த ஒருவர் நடிகை கெளதமியை சந்தித்ததாகவும், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா? என்பது இன்னும் ஓரிருநாட்களில் பாஜகவின் வேட்பாளர் அறிவிப்பின்போது தெரியவரும்.

ஆர்.கே. நகரில் கெளதமியை களமிறக்கினால் ஜெயலலிதா இடத்தை இவர் கைப்பற்றி விடுவார் என்று பாஜக வட்டாரம் யோசனை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"ஜெயலலிதா இடத்துக்கு கௌதமி?" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty