பதறும் 'மகளிர் மட்டும்' படக்குழு
15-03-2017 05:55 PM
Comments - 0       Views - 139

“36 வயதினிலே" திரைப்படத்தைபோன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஜோதிகா.

பல இயக்குநர்கள் சொன்ன கதை பிடிக்காததால் நேரடியாகவே கதை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு நல்ல கதைகளுக்காக காத்திருந்தபோதுதான் “குற்றம் கடிதல்” திரைப்படத்தை இயக்கிய பிரம்மா சொன்ன “மகளிர் மட்டும்” கதையை ஓகே செய்தார் ஜோதிகா.

படப்பிடிப்பு முடிந்து தற்போது திரையிடத் தயாராகி விட்டது. இந்த நேரத்தில் இத்திரைப்படத்தில் ஆவணப்பட இயக்குநராக ஜோதிகா நடித்திருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து, இந்தத் திரைப்படமும் ஆவணப்படம் போலவே படமாக்கப்பட்டிருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளன.

கிட்டத்தட்ட “குற்றம் கடிதல்“ பாணியில்  இந்த திரைப்படம் செய்தி பரவியதை அடுத்து, அதிர்ச்சியடைந்த படக்குழு, இதை மாற்ற வேண்டும் என்பதற்காக “மகளிர் மட்டும்” திரைப்படம் எல்லாவித கமர்சியல் விடயங்களும் கலந்த திரைப்படமாக தயாராகியிருப்பதாக தெரிவித்துள்ளது.

"பதறும் 'மகளிர் மட்டும்' படக்குழு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty