ஆஷ்னா சவேரியின் அன்புத்தொல்லை
15-03-2017 05:56 PM
Comments - 0       Views - 291

கோலிவுட்டில் மேல்தட்டு ஹீரோக்களின் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று திரைக்குப்பின்னால் தீவிரம் காட்டி வருகிறார் ஆஷ்னா சவேரி.

அத்துடக், சந்தானமும் தற்போது முன்னணி ஹீரோ பட்டியலில் இணையும் தருவாயில் இருப்பதால் அவருடன் மீண்டும் நடிப்பதற்காக நட்புரீதியில் பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளாராம்.

ஆனால், சந்தானத்துடன் முதல் இரண்டு திரைப்படங்களில் நாயகியாக நடித்தபோது அவருடன் கிசுகிசுக்கப்பட்டவர் ஆஷ்னா என்பதால், சந்தானம் தரப்பில் இருந்து இன்னமும் சம்மதம் கிடைக்கவில்லையாம்.

இருப்பினும், எனக்கு ஆதரவு கொடுத்தே ஆக வேண்டும் என்று சந்தானத்திடம் தொடர்ந்து அன்புத்தொல்லை செய்து வருகிறார் ஆஷ்னா சாவேரி.

நடிகை ஆஷ்னா சவேரி, சந்தானத்துடன் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான்” ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"ஆஷ்னா சவேரியின் அன்புத்தொல்லை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty