கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயால் 3,500 பேர் பாதிப்பு
16-03-2017 11:11 AM
Comments - 0       Views - 138

-அப்துல்சலாம் யாசீம், பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியினுள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 3,821 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

திருகோணமலையில் 2,088 பேரும் மட்டக்களப்பில்  900 பேரும் அம்பாறையில் 100 பேரும் கல்முனையில் 733 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் காரியாலயத்தில் புதன்கிழமை (15) மாலை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும், காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் பொதுமக்கள் வைத்தியசாலையை நாட வேண்டும் எனத் தெரிவித்த அவர், கிண்ணியாவில் சிலர் காய்ச்சல் ஏற்பட்டு சில நாட்களின் பின்னரே வைத்தியசாலையை நாடுவதாகவும்  தெரியவந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

 

" கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயால் 3,500 பேர் பாதிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty