'நீதி வேண்டும்'
16-03-2017 11:26 AM
Comments - 0       Views - 51

-வா.கிருஸ்ணா, வடமலை ராஜ்குமார், எம்.எஸ்.எம்.நூர்தீன்,  ஏ.எச்.ஏ.ஹுஸைன், எஸ்.பாக்கியநாதன், எஸ்.கார்த்திகேசு, வடிவேல் சக்திவேல்

மூன்றம்சக் கோரிக்கையை முன்வைத்து வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை, அம்பாறை   மாவட்டங்களில் இன்று(16) ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதிப் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பணிக்குழுவின் அறிக்கையை உடனடியாக  அமுல்படுத்த வேண்டும், நிலைமாறு கால நீதிக்கான அமைச்சு உருவாக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தபோது,'எமது காணாமல் போன உறவுகள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் மௌனம் காக்கின்றது. இந்நிலையில், எந்த அரசாங்கம் வந்தாலும், எமக்கு நீதி கிடைக்காது என்ற மனநிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே,  சர்வதேசமே எமக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும்

மேலும், காணாமல் போன எமது உறவுகளின் நிலைமை தொடர்பில் உறுதியான பதில் கிடைக்கும் வரையில் எமது போராட்டங்கள் ஓயப்போவதில்லை' என்றனர்.  

"'நீதி வேண்டும்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty