'மணல் வீதிகள் கிறவல் வீதிகளாகப் புனரமைக்கப்பட வேண்டும்'
16-03-2017 12:48 PM
Comments - 0       Views - 37

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் மணல் வீதிகளை கிறவல் வீதிகளாகப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாநகர சபையின் ஆணையாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவுக்கான  அபிவிருத்திக் குழுக் கூட்டம், கடந்த செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.  

இதன்போது, மண்முனை வடக்குப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

கடந்த வருடத்தில் மண்முனை வடக்குப் பிரதேசத்தில்  916 அபிவிருத்தித் திட்டங்களுக்காக  சுமார் 84 மில்லியன் ரூபாய் நிதி  செலவிடப்பட்டதுடன், மேற்படி திட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என அப்பிரதேச செயலாளர் என்.குணநாதன் தெரிவித்தார்.

 

"'மணல் வீதிகள் கிறவல் வீதிகளாகப் புனரமைக்கப்பட வேண்டும்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty