தணிக்கை தகர்க்கும் தனிக்கை...
18-03-2017 07:48 AM
Comments - 0       Views - 314

'தமிழ் மிரர்' பத்திரிகை மற்றும் இணையம் ஆகியவற்றின் ஆசிரியர் ப.மதனவாசனின் (ஏ.பி.மதன்) 'தணிக்கை தகர்க்கும் தனிக்கை' என்ற நூலின் முதல் பிரதியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, நேற்று மாலை வெளியிட்டு வைத்தார்.

கொழும்பு – 10, தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில், நேற்றுமாலை 2 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வு, 'காலைக்கதிர்' பத்திரிகையின் ஆசிரியர் என்.வித்தியாதரன் தலைமையிலும் டெக்கான் குரோனிக்கலின் (இந்தியா) நிறைவேற்று ஆசிரியர் பஹ்வான் சிங்கின் இணைத் தலைமையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அமைச்சர்களான கயந்த கருணாதிலக, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: வருண வன்னியாராச்சி)

"தணிக்கை தகர்க்கும் தனிக்கை..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty