திருகோணமலையில் டெங்குவின் கோரம்: சிறுமி பலி
18-03-2017 08:37 AM
Comments - 0       Views - 198

வடமலை ராஜ்குமார்

தீவிரமடைந்து வரும் டெங்குக் காய்ச்சலினால் திருகோணமலையில் மேலும் சிறுமியொருவர் பலியாகியுள்ளார்.

திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முதலாம் தர மாணவியான 6 வயதுடைய உதயராஜன் அஞ்சனா என்ற சிறுமியே, இவ்வாறு பலியாகியுள்ளார்.

இச் சிறுமியின் உயிரிழப்புடன், திருகோணமலை மாவட்டத்தில் டெங்குவினால் பலியானோர் தொகை, 15 பேராக உயர்ந்துள்ளது.

திருகோணமலை பிரதேச சுகாதாரப் பிரிவில், 440 பேர், டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"திருகோணமலையில் டெங்குவின் கோரம்: சிறுமி பலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty