மகளை அடித்துக்கொன்ற தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு
18-03-2017 09:01 AM
Comments - 0       Views - 199

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, மத்தியமுகாம் 11ஆம் கொலனி பிரதேசத்தில் மகளை அடித்துக் கொலை செய்த சந்தேகநபரான தாயாரை, எதிர்வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், நேற்று (17) உத்தரவிட்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி, மகள் மதம் மாறியமை தொடர்பில் தாய்க்கும் மகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தாய் கட்டில் பலகையால் மகள் மீது தாக்கியுள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் உயிரிழந்த மகளின் சடலத்தை, வீட்டின் பின்புறத்தில் கிடங்கு வெட்டித் தாய் புதைத்துள்ளதாக, விசாரணையிலிருந்து தெரியவந்தது.

தனது வளர்ப்பு மகளான செல்வநாயகம் ஜனனி (வயது 21) என்பவரை அடித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தை புதைத்த சம்பவத்தை தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில், அம்மகளின் தாய் (வயது 55) சந்தேகத்தின் பேரில் தாயாhர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

"மகளை அடித்துக்கொன்ற தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty