காத்தான்குடியிலும் டெங்கு; 9 வயது சிறுமி உயிரிழப்பு
18-03-2017 10:59 AM
Comments - 0       Views - 176

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சலினால் நேற்றிரவு (17) சிறுமியொருவர் உரிழந்துள்ளார்.

புதிய காத்தான்குடி நூறானிய்யா மைய்யவாடி வீதியைச் சேர்ந்த ஜி.பாத்திமா ஹதீஜா (வயது 9) எனும் சிறுமியே டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமையன்று, குறித்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றும் பயனில்லாததால், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலிருந்து குறித்த சிறுமி, வியாழக்கிழமை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுமி டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் இது வரைக்கும் 36 பேருக்கு டெங்கு ஏற்பட்டுள்ளதாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார். 

"காத்தான்குடியிலும் டெங்கு; 9 வயது சிறுமி உயிரிழப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty