'மினிசூறாவளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை'
18-03-2017 11:34 AM
Comments - 0       Views - 10

-கு.புஸ்பராஜ்

“மலையக பிரதேசத்தில், மினி சூறாவளியால் ஏற்படும் ஆபத்துகள் தொடர்பாக பொதுமக்களுக்கு, அதிகாரிகள் ஊடாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என, மத்திய மாகாண சபை  உறுப்பினரும் நுவரெலியா பிரதேச அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான ஏ. பி சத்திவேல் தெரிவித்தார்.

கடந்த 15ஆம் திகதி, நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாரன்டன் மேற் பிரிவு தோட்டத்தில் ஏற்பட்ட மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி பொருடகள் வழங்கி வைக்கும் நிகழ்விலேயே அவர் இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த வாரம், மெராயா பிரதேசத்தில் ஏற்பட்ட மினி சூறாவளி காற்றினால் பாரிய மரங்கள் முறிந்து விழுந்ததுடன் அதிகமான வீடுகளும் சேதமாகியன.

இது இடம்பெற்று ஒரு வாரம் கூட இல்லை. தற்போது கிளாரன்டன் தோட்டத்திலும் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியிருப்பது வேதனை தரும் விடயமாகும்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு பிரதேச செயலகத்தின் ஊடாகவும் சேதமடைந்துள்ள வீடுகளை திருத்தும் பணியை தோட்ட நிர்வாகம் முன்னெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

"'மினிசூறாவளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty