நீராடச் சென்ற மாணவன் மாயம்
18-03-2017 11:43 AM
Comments - 0       Views - 41

-மொஹொமட் ஆஸிக்

கண்டி - ஹல்ஒழுவ பிரதேசத்தில், தமது நன்பர்களுடன் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற 16 வயது மாணவன் ஒருவன், காணாமல் போயுள்ளதாக, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரவித்தனர்.

கண்டி தர்மராஜ கல்லூரிக்கும் கிங்ஸ்வுட் கல்லூரிக்கும் இடையில் நேற்று கிரிக்கெட் போட்டி நடைபெற்றுது. இதன்போது, அங்கிருந்த மாணவர்கள் ஐவர் நீராடச் சென்போது, ஒரு மாணவர் இவ்வாறு நீரிழ் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி தர்மராஜ கல்லூரியில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் திலந்த முதலிகே என்ற மாணவனே இவ்வாறு காணமால போயுள்ளார்.

இவரை தேடும் நடவடிக்கைகள், இன்றும் கடற் படையின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

"நீராடச் சென்ற மாணவன் மாயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty