'டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை'
18-03-2017 12:27 PM
Comments - 0       Views - 65

-பொன்ஆனந்தம்

“திருகோணமலையில் ஏற்பட்டுள்ள டெங்குத் தாக்கத்தை கட்டுப்படுத்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடயம் மிகுந்த கவலைக்குரியதாகும்”  என,  விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

திருகோணமலை மெய்கெய்சர் விளையாட்டரங்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டரங்கு மற்றும் நீர்சல் தடாகம் என்பனவற்றை நேற்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“பல மில்லியன் ரூபாய் செலவில் நீண்டபல ஆண்டுகள் பாவிக்ககூடிய வகையில், திருகோணமலை மெய்கெய்சர் விளையாட்டரங்கு முழுமையான வசதிகளுடன் புனரமைக்கப்படும்.

தேசிய விளையாட்டுப்போட்டிகளில்  இங்குள்ள வீரர்கள் சொற்பமானவர்களே பங்குபற்றி வந்துள்ளனர். அவர்களுக்கான போதிய மைதான வசதிகள், விளையாட்டு உபகரணங்கள் இன்மை காரணமாகவும் கடந்த காலத்தில், பல வருடங்களாக நிலவிய  சூழ்நிலமைகள் காரணமாகவும் அவர்களால் தேசிய விளையாட்டுகளில் பங்குபற்ற முடியதுபோனது.

இதன்காரணமாக எனது விளையாட்டுத்துறை அமைச்சின் 2016ஆம் ஆண்டுக்குமான முழு நாட்டுக்குமான  ஒதுக்கீட்டின் 35 சதவீதமான நிதியை வட-கிழக்கு மாகாணங்களின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக  செலவிட ஒதுக்கி விளையாட்டுத்துறை அபிவிருத்தியில் பங்களிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டது. மிகுதி நிதியையே ஏனைய 7 மாகாணங்களின் விளையாட்டுப்பணிகளுக்காக  ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில்,  சகலவசதிகளையும் கொண்ட பிராந்திய விளையாட்டு மைதானமாக இந்த விளையாட்டுமைதானத்தை புனரமைத்து, விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும்  வழங்க மிக விரைவாக  நடவடிக்கை எடுத்து வருகின்றேன்” என்றார்.

"'டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty