விபத்தில் இருவர் பலி: ஒருவர் காயம்
19-03-2017 11:14 AM
Comments - 0       Views - 129

அப்துல்சலாம் யாசீம்

வாகரைப் பிரதேசத்தில் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி ஊடாகப் பயணித்த   பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் சனிக்கிழமை (18)  மாலை மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயான பாலையூற்றைச் சேர்ந்த செறின் எடன் (வயது 54); திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைக்   கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 

" விபத்தில் இருவர் பலி: ஒருவர் காயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty