பெயர்ப் பலகை உடைப்பு: விசாரணைகள் ஆரம்பம்
19-03-2017 11:49 AM
Comments - 0       Views - 65

மொஹொமட் ஆஸிக்

பேராதனை பல்லைக்கழகத்தின் புதிய மாணவர் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த பெயர்ப்பலகை, உடைக்கப்பட்டச் சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழக மட்டத்தில்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க தெரிவித்தார்.

மேற்படி பல்கலைக்கழகத்தில், சுமார் 400 மாணவர்கள் தங்கக் கூடிய வகையில் நூறு அறைகளைக் கொண்ட நான்கு மாடிக் கட்டடம் புதிததாக அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இடம்பெறவிருந்த நிலையில், அதன் பெயர்ப் பலகை, சனிக்கிழமை இனந்தெரியாத நபர்களினால் உடைத்து எறியப்பட்டுள்ளது.

மகாபொல புமைப்பரிசில் திட்டத்தை முன்வைத்த காலஞ்சென்ற அமைச்சர் லலித்அத்துலத் முதலியினது பெயர், மாணவர் விடுதிக்கு  சூடப்பட இருந்ததாகவும், அதற்கு மாணவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததாகவும் பேராதனைப்  பல்லைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

நிதி அமைச்சின் செயலாளரினால், சனிக்கிழமை திறந்துவைக்கப்பட இருந்த இக்கட்டடம்,  பெயர்ப் பலகை உடைப்புச் சம்பவத்தையடுத்து பிற்போடப்பட்டது.

இது தொடர்பாக  பல்லைக்கழக மட்டத்தில் ஆரம்ப விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க மேலும் கூறினார்.

"பெயர்ப் பலகை உடைப்பு: விசாரணைகள் ஆரம்பம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty