கிரானில் பொதுச்சந்தை திறந்துவைப்பு
19-03-2017 11:53 AM
Comments - 0       Views - 57

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கிரான் பகுதியில் புதிதாக  அமைக்கப்பட்ட பொதுச்சந்தையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  14 பேருக்கு  முன்னுரிமை  அளிக்கப்பட்டு கடைகள் வழங்கப்பட்டுள்ளன என அப்பிரதேச  சபைச்; செயலாளர்  எஸ்.எம்.ஷிஹாப்தீன் தெரிவித்தார்.

15 மில்லியன் ரூபாய் செலவில் 14 கடைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்ட இச்சந்தைக்கான திறப்பு விழா,  இன்று (19)  நடைபெற்றது.

இந்தக் கடைகளைப் பெற்றுக்கொண்டவர்களில் குடும்பங்களைத் தலைமை தாங்கும் 9 பெண்களும் யுத்தத்தால் அங்கவீனமான  2 பேரும் அடங்குகின்றனர் எனவும் அவர் கூறினார்.

 

"கிரானில் பொதுச்சந்தை திறந்துவைப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty