தூய அரசியலை வலியுறுத்தி அம்பாறையில் பேரணி
19-03-2017 12:12 PM
Comments - 0       Views - 75

-வி.சுகிர்தகுமார்

தூய அரசியலை வலியுறுத்தி 'மார்ச் 12' என்ற இயக்கத்தின் விழிப்புணர்வுப் பேரணி அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் துஷித்த பி.வணிகசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ள இப்பேரணியின் இறுதி நிகழ்வு,   கச்சேரி மண்டபத்தில் நடைபெறும் என மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர் வி.பரமசிங்கம் தெரிவித்தார்.

பெரியநீலாணையில் பிற்பகல் 2.30 மணிக்கு  ஆரம்பாகும் பேரணி கல்முனை, காரைதீவு,  ஒலுவில், அக்கரைப்பற்று, இறக்காமம் ஆகிய பகுதிகள் ஊடாக அம்பாறை நகரைச்  சென்;றடையவுள்ளது எனவும் அவர் கூறினார்.   

இப்பேரணி தொடர்பான கலந்துரையாடல், அக்கரைப்பற்றிலுள்ள அரசசார்பற்ற இணையத்தின் தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்றது.

மேலும், எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பட்டியல் முறை அடிப்படையில் நடைபெறவுள்ளதால்,  வட்டாரத்துக்காக தெரிவு செய்யப்படும் வேட்பாளருக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதுடன், தகுதியான வேட்பாளர்களை நியமிக்கும்  பொறுப்பும் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இப்பேரணியின்போது வலியுறுத்தப்படவுள்ளது. இதற்கான அனைவரினதும்  பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

" தூய அரசியலை வலியுறுத்தி அம்பாறையில் பேரணி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty